போலீஸ் வெளியிட்ட குற்றவாளி ஸ்கெச். 
இந்தியா

உ.பி.யில் 6-வயது சிறுமி பலாத்காரம்: 4 நாட்கள் ஆகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

ஏஎன்ஐ

கடந்த வியாழனன்று உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

4 நாட்கள் ஆகியும் போலீஸாரால் குற்றவாளிகளைத் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

கர் முக்தேஸ்வர் பகுதியிலிருந்து இந்தச் சிறுமி அவரது வீட்டின் அருகிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரால் கடத்தப்பட்டார். இது டெல்லியிலிருந்து 100 கிமீ தூரத்தில் உள்ளது.

போலீஸ் இது தொடர்பாக 3 வரைபடங்களை வெளியிட்டுள்ளது. சிறுமியின் வாக்குமூலம் இவரது பெற்றோரின் புகாரின் படி இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

மகளைக் காணவில்லை என்று பதைபதைப்புடன் பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார் புகார் அளித்த நிலையில் போலீஸார் சிறுமியை புதர் அருகே ரத்தம் தோய்ந்த உடைகளுடன் மீட்டனர்.

மருத்துவச் சோதனை செய்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. சிறுமிக்கு ஒரு அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது. இவருக்கு நீண்ட சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் தேவைப்பட்டால் இன்னும் சில அறுவை சிகிச்சையும் செய்யப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம், இதற்காக 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT