மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங், 2014 முதல் மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று விமர்சித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை திறனற்றதாக்கி விட்டு அதனிடம் திறனில்லை எனவே தனியார்மயம்தான் சரி என்பது போன்ற ஒரு கருத்தை மத்திய அரசு உருவாக்கி வருவதாக அவர் மேலும் சாடினார்.
போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திக்விஜய் சிங் கூறியதாவது:
பாஜக வலதுசாரி கொள்கை கொண்ட ஒரு கட்சி. முதன் முதலாக நாட்டில் ஆர்.எஸ்.எஸ். கொள்கையுடைய கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. 2014 முதலே இந்தக் கொள்கையின் மூலம் எடுக்கு நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு விரோதமானவையாக இருந்து வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களிடம் தொழில்நுட்ப திறன் இல்லை என்பதாகக் காட்டி அதை தனியார் மயமாக்க வேண்டும் என்று மக்களிடத்தில் ஒரு கருத்தை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
இவ்வாறு கூறினார் திக்விஜய் சிங்.