இந்தியா

மணிப்பூர் பாஜக அரசுக்கு எதிராக காங். நம்பிக்கையில்லா தீர்மானம்

செய்திப்பிரிவு

மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது. பிரேன் சிங் முதல்வராக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில், 3 பாஜக எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக சபாநாயகரிடம் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. 10-ம் தேதியன்று காலை சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் வரும் 10-ம் தேதி காலை 11 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சட்டப்பேரவை கட்சி எடுத்துள்ள முடிவின்படி வாக்களிக்க வேண்டும் என்றும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT