கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 123 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்கும் போது விபத்து ஏற்பட்டது. இரவு 7:38 மணியளவில் விபத்து ஏற்பட்டு உள்ளது.
மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இதில் முன்பக்கம் விபத்துக்குள்ளானது. மேலும் லேசான அளவில் நொறுங்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர் மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 123 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் விமானத்தின் முன் பகுதி 2 ஆக உடைந்ததாக தெரிகிறது. எனினும் விபத்துக்குள்ளான விமானம் அதிருஷ்டவசமாக தீ பிடித்து எரியவில்லை. இதனால் பெரும் விபத்தாக மாறி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மீட்பு படையினரை உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடுமாறு பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விமான விபத்து நடந்த தகவல் அறிந்து பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்களை விபத்து பகுதிக்கு அனுப்பியுள்ளதாகவும், மீட்ப பணிகள் முழு அளவில் நடந்து வருவதாகவும் பினராயி விஜயன் பிரதமரிடம் தெரிவித்தார்.
விமான விபத்து குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உள்ளிட்டோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.