மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷண் கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து ட்விட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து பிரசாந்த் பூஷணின் கருத்து நீதித் துறையையும் நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷணுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் பிரசாத் பூஷண் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடினார். கடந்த புதன்கிழமை விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.