ராமஜென்மபூமியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஐ அயோத்தியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடியின் மன உறுதி, செயல் உறுதியே இந்தியாவில் கடந்த 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த தலைவராக்கியுள்ளது என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மகாயக்ஞம் இன்றுதான் நிறைவேறுகிறது.
“பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுகிறார். 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மகா யக்ஞம் இன்றுதான் ஈடேறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மன உறுதியும் செயல் உறுதியும் இந்தியாவில் அவரை கடந்த 500 ஆண்டுகளின் மிக உயர்ந்த தலைவராக்கியுள்ளது” என்றார், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
முன்னதாக கோவிட்-19 சிகிச்சை முடிந்து சிவராஜ் சிங் சவுகான் போபால் சிராயு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் 7 நாட்களுக்கு இவர் தனிமையில் இருக்க வேண்டும்.
இதற்கிடையே பூமிபூஜைக்காக பிரதமர் நரேந்திர மோடி லக்னோ வந்து விட்டார், இங்கிருந்து அயோத்தி செல்கிறார். ராமஜென்மபூமி க்கு வருகை தரும் முதல் பிரதமரும் மோடிதான்.