இந்தியா

கரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை

செய்திப்பிரிவு

கடந்த 24 மணி நேரத்தில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளை இந்தியா பரிசோதனை செய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவில் 6,61,892 மாதிரிகள் கோவிட்-19-க்காக பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்தப் பரிசோதனைகளை 2,08,64,750 ஆகவும் பத்து லட்சம் பேருக்கான பரிசோதனைகளை 15,119 ஆகவும் ஆக்கியுள்ளது.

மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த மற்றும் கவனமான முயற்சிகளின் காரணமாக நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்புள்ள நபர்களை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்துவதற்காக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேம்படுத்தப்பட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் பரிசோதனை யுக்தி இந்தியாவின் பரிசோதனை வலையை விரிவுப்படுத்தியுள்ளது.

சந்தேகப்படும் பாதிப்புகளின் விரிவான கண்காணிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் "கோவிட்-19 காரணமாக பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை சீரமைப்பதற்கான பொது சுகாதார முறைகள்" என்னும் வழிகாட்டும் குறிப்பு அறிவுறுத்துகிறது. ஒரு நாளைக்குப் பத்து லட்சம் பேருக்கு 140 பரிசோதனைகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

பத்து லட்சம் பேரில் சராசரியாக ஒரு நாளைக்கு 479 பரிசோதனைகளை இந்தியா மேற்கொண்டு வரும் வேளையில், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள படி இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பத்து லட்சம் பேரில் ஒரு நாளைக்கு 140-க்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்கின்றன.

பத்து லட்சம் பேரில் ஒரு நாளைக்கு 140-க்கும் அதிகமான பரிசோதனைகளை 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்கின்றன.

"பரிசோதனை செய், தடமறி, சிகிச்சை அளி' என்னும் அணுகுதலை சார்ந்த கவனமிக்க யுக்தி, கோவிட்-19 பரிசோதனைகளின் தொற்று உறுதியாதல் விகிதத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. இன்றைய அளவில் இந்தியாவின் சராசரித் தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதம் 8.89 சதவீதமாக இருக்கிறது. 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது பரிசோதனை யுக்தி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதைக் குறிக்கிறது. தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதத்தை 5 சதவீதமாக மேலும் அதிகரிப்பதற்குத் தான் மத்திய மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசுகள் முயற்சிக்கின்றன.

28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.ஒரு நாளைக்கு 10 லட்சம் பரிசோதனைகள் செய்யும் நோக்கத்துடன், பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. நாட்டில் தற்சமயம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 1356 ஆக உள்ளது, இவற்றில் 917 ஆய்வகங்கள் அரசுத் துறையைச் சேர்ந்ததாகவும், 439 தனியார் ஆய்வகங்களாகவும் உள்ளன.

* உடனடி ஆர்டி பிசிஆர் சார்ந்த பரிசோதனை மையங்கள்: 691 (அரசு: 420 + தனியார்: 271)

* ட்ரூநாட் சார்ந்த பரிசோதனை மையங்கள்: 558 (அரசு: 465 + தனியார்: 93)

* சிபிநாட் (CBNAAT) சார்ந்த பரிசோதனை மையங்கள்: 107 (அரசு: 32 + தனியார்: 75)

SCROLL FOR NEXT