நாட்டைப் பீடித்துள்ள கரோனா வைரஸ் தொற்று பகவான் ராமரின் அருளால் முற்றிலும் ஒழிந்து விடும் என்று சிவசேனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பத்திரிகையான் சாம்னாவில், “பிரதமர் மோடி பூமிபூஜையில் கலந்து கொண்டு அடிக்கல்நாட்டுவதைப் போல பொன்னான தருணம் வேறு இருக்க முடியாது. கரோனா வைரஸ் உள்ளது, ஆனால் பகவான் ராமரின் அருளால் முற்றிலும் ஒழிந்து விடும், நாடு கரோனாவிலிருந்து மீண்டு விடும்.
அத்வானி, ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் வயதானதால் கரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் கலந்து கொள்ள மாட்டார்கள். உமாபாரதியும் தன் மனக்கண்ணால் நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பார்
கரோனா வைரஸ் அயோத்தி, உத்தரப் பிரதேசம், ஏன் நாடு முழுதுமே பரவியுள்ளது. இந்த நெருக்கடியும் பகவான் ராமரின் அருளால் முடிந்து போகும்.
பிரதமர் மொடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆகியோர் இருந்தாலும் அமித் ஷா இல்லாமல் நிகழ்ச்சி களைகட்டாது. ஷாவுக்கு துரதிர்ஷ்டவசமாக கரோனா.
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் அமித் ஷா, ஆனால் ராமர் புண்ணியத்தில் இவர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று ஆழமாக நம்புகிறோம்.” இவ்வாறு அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.