டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ‘அமன் ஹாஸ்பிடாலிட்டி’ நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்டுவதாகக் கூறி வெவ்வேறு வங்கிகளில் இருந்து அந்நிறுவனம் ரூ.800 கோடி கடன் வாங்கியது. ஆனால், நீண்ட காலமாகியும் அந்தக் கடன் தொகையை அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், அமன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மீது அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜ் சிங் கெலாட், தயானந்த் சிங் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, ராஜ்சிங் கெலாட்டின் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.