அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையை மெய்நிகர் நிகழ்வாக வீடியோ கான்பரன்சிங்கில் செய்ய வேண்டும் என்று சிவசேனா தலைவரும் மகாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். இதனையடுத்து அகில இந்திய துறவிகள் சமிதியின் பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கடுமையான விமர்சனத்த்தை முன்வைத்தார்.
அவர் இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறியதாவது:
தன் தந்தை பால் தாக்கரேயின் வழிவந்த தகுதியற்ற அவரது மகன் உத்தவ் அரசியல் மொழியை ஆன்மீகத்துடன் ஒன்று கலக்குகிறார். இத்தாலியப் பட்டாலியன்களின் மடி மீது அமர்ந்திருப்பவரிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
இவர் தந்தை பால் தாக்கரே மிகப்பெரிய மனிதர், தொடர்ந்து ராமர் கோயிலை ஆதரித்து வந்தார். ஆனால் உத்தவ் தாக்கரே மிஷனரி பள்ளியில் படித்தவர். அதனால் அவருக்கு மெய்நிகருக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடு புரியவில்லை. மண்ணைத் தொடாமல் எப்படி வீடியோ கான்பரன்சிங்கில் பூமி பூஜை நடத்த முடியும்?
அயோத்தி இந்தியாவின் நாளைய ஆன்மீகத் தலைநகர். பூமிபூஜைக்கு பிறகான மாற்றங்களை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பல தொழிலதிபர்கள் இங்கு வருகிறார்கள் இவர்கள் அயோத்தியை வளர்ச்சிக்குக் கொண்டு செல்வார்கள். சிதைவுகள், கழிவுகள், குரங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து ராம ராஜ்ஜியத்தை நோக்கி செல்லவிருக்கிறது. இதுதான் பூமி பூஜையின் தாத்பரியம்.
இதற்கு அடுத்து கிருஷ்ணஜென்ம பூமியையும் நாம் பார்க்கத்தான் போகிறோம், காசியும் மதுராவும் எங்களுக்கு வேறுபாடு இல்லாதது.
இவ்வாறு கூறினார் அவர்.