அயோத்தி. படம்.| ஏஎன்ஐ 
இந்தியா

வண்ண விளக்குகள், அலங்கார தோரணங்களுடன் பூமி பூஜைக்காக களைகட்டும் அயோத்தி 

ஏஎன்ஐ

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அயோத்தியில் பூமிபூஜைக்கான சடங்குகள் தொடங்குகின்றன. 5ம் தேதி பிரதமர் அடிக்கல்நாட்டுகிறார், பூமி பூஜையின் பிரதான நிகழ்வும் 5ம் தேதியன்று நடைபெறுகிறது.

இதற்காக அயோத்தி பெரிய அளவில் தயாராகி வருகிறது. 200 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தயாரிப்பில் நிகழ்சி ஏற்பாடுகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார், இது தொடர்பாக பாஜக பிரமுகர் வினய் காத்தியார் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

பூமி பூஜை நிகழ்ச்சிக்காக அயோத்தி முழுதையும் அலங்கரிக்கும் பொறுப்பும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமையன்று அயோத்தியின் பல இடங்களில் வண்ண விளக்குகள், அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டன. சாலைகள் அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இப்போது அயோத்தியின் முழு அமைப்புமே மாறிவிட்டது, என்றார்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒரு இடத்தில்ல் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளோம். 12 இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ” என்றார்.

SCROLL FOR NEXT