டெல்லியில் சனிக்கிழமையன்று 1,118 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,36,716 ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை 4,000-த்தை நெருங்குகிறது. ஆனால் சிகிச்சையில் சுமார் 10,596 பேர் உள்ளனர். மொத்த கரோனா பாதிப்பில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 131 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லியில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 89.3% என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறும்போது, “டெல்லியில் கரோனா பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதை நான் நேரடியாகக் கண்காணித்தேன். அதனால்தான் கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை டெல்லியில் 89 சதவீதமாக உள்ளது.
வைரஸைக் கட்டுப்படுத்துவதில் டெல்லியை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்” என்றார்.