கல்வியாளர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஷ்வத் நாராயணா, தொடக்க மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் ஆகியோர் இந்த வரைவுக்குழுவின் தலைவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கனுடன் காணொலி மூலம் நேற்று உரையாடினர். அப்போது, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்த வரைவு குழுவை எடியூரப்பா பாராட்டினார்.
இந்த கூட்டத்துக்கு பின் துணை முதல்வர் அஷ்வத் நாராயணா கூறியதாவது:
கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங் கன் தலைமையிலான குழுவினர்மிகுந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்தக் கொள்கையை வடிவமைத்துள்ளனர்.
இதனை செயல்படுத்துவதற் காக, ‘புதிய கல்விக் கொள்கைபணிக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆகஸ்ட் 16-ம்தேதி முதல் கட்ட திட்ட வரைவுஅறிக்கையை தாக்கல் செய்யும்.ஆகஸ்ட் இறுதிக்குள் கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கைஅமல்படுத்தப்படும்.
இவ்வாறு அஷ்வத் நாராயாணா தெரிவித்தார்.
அமைச்சர் சுரேஷ் குமார்கூறுகையில், ‘‘முதலில் கர்நாடகஅரசு உருவாக்கியுள்ள கல்விகொள்கையையும், மத்திய அரசின்புதிய கல்வி கொள்கையையும் ஒப்பிட்டு ஆராய இருக்கிறோம்.2 வாரத்துக்குள் இரண்டு கொள்கைகளும் இணைக்கப்படும். அதன்பின்னர், கர்நாடக மாநிலத்துக்கான தனிக் கல்வி கொள்கை உருவாக்கப்படும்'' என்றார்.