இந்தியா

நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலு் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். டெல்லி ஜூம்மா மசூதி உட்பட முக்கிய மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கரோனா தொற்று குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொதுவெளியில் தொழுகை நடத்த அனுமதி இல்லாததால் அவரவர் இல்லங்களில் தொழுகை நடத்தினர்.

இந்தநிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது

“தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்! ஒரு நியாயமான, இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். நம்மிடையே சகோதரத்துவம் மற்றும் இரக்கத்துவத்தின் தன்மை பெருகட்டும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT