இந்தியா

உ.பி. இளம்பெண்கள் கொலை விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தாமாகவே முன்வந்து, விசாரணைக் கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது தேசிய மகளிர் ஆணையம்.

இப்பிரச்சினையில் இதுவரை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்த அறிக்கை கோரியுள்ளோம். அறிக்கை கிடைத்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய தலைவர் மமதா ஷர்மா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில், காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், காவலர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT