கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர் ஆருஷி ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில், ‘கரோனா வுக்கு சிகிச்சை அளிக்கும் மருத் துவர்களுக்கும் சுகாதாரப் பணி யாளர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படு வதில்லை. எனவே, அவர் களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க உத்தர விடவேண்டும். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை விடுப்பாக கருதக் கூடாது. அதற்காக ஊதி யத்தை பிடிக்கக் கூடாது’ என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மருத்துவர் களுக்கு சரியான நேரத்தில் ஊதி யம் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசை அறிவுறுத்தியது. அதன் பேரில் மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகி யோரைக் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பிவிட்டது. ஆனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, திரிபுரா போன்ற மாநிலங்கள் இன்னும் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை’’ என்றார்.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மத்திய அரசின் உத் தரவை மாநில அரசுகள் நிறை வேற்றி மருத்துவர்களுக்கும் சுகா தாரப் பணியாளர்களுக்கும் சரி யான நேரத்தில் ஊதியம் கிடைப் பதை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரிடர் மேலாண்மை சட்டத் தின் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு நட வடிக்கை எடுக்கலாம். மேலும், சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் விடுப்பாக கருதப்படு கிறதா என்பதையும் அதற்கு ஊதியம் பிடிக்கப்படுகிறதா என்பதையும் மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தனர். பின்னர், விசா ரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.