கோப்புப் படம். 
இந்தியா

அயோத்தி தொடர்பான ரூ.300 கோடி மதிப்புள்ள திட்டங்கள்: பெரிய அளவில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரம்

செய்திப்பிரிவு

ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி முடிந்த பிறகு அயோத்தி தொடர்பான ரூ.326 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்ப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஆகஸ்ட் 5ம் தேதி இதனைக் கண்காணிக்கும் முழுப் பொறுப்பும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் வசமே என்றும் கூறுகிறது.

அயோத்தி முழுதும் பெரிய அளவில் அலங்கரிக்கப்படவுள்ளது. நகரின் பல இடங்களில் பெரிய திரைகள் வைக்கப்படவுள்ளன. இதில் பிரதமர் பங்கேற்கும் பூமிபூஜை அடிக்கல்நாட்டு விழா போன்றவை நேரலையாக ஒளிபரப்படவுள்ளன.

தூர்தர்ஷனிலும் 5ம் தேதி நிகழ்சிகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 200 பேர் வரைதான் பூமி பூஜையில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, கர்ப்பகிரஹத்தில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளி அடித்தளம் அமைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் வேத மந்திரங்கள் உட்பட பல்வேறு புனிதச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராம்பாபு லால் டெய்லர் கடையில் விக்கிரகங்களுக்கான புதிய ஆடைகளைத் தைப்பதில் ஊழியர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். வெல்வெட் துணியாக இது இருக்கும் அதில் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் விதமாக அமையும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT