இந்தியா

மகாராஷ்டிராவில் வெட்கங்கெட்ட ஆட்சி நடக்கிறது: ஜே.பி.நட்டா சாடல்

செய்திப்பிரிவு

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து மத்திய அரசின் மீதும் மோடியின் செயல்பாடுகள் மீதும் விமர்சனம் வைத்து வருவதையடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சி மீது பாய்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது,

“மகாராஷ்டிர அரசின் சுயநலத்தையும் அவர்களின் உண்மையான நோக்கத்தையும் அம்மாநில மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். அங்கு வெட்கங்கெட்ட ஆட்சி நடக்கிறது.

கூட்டணிக்குள் சண்டையும் உட்கட்சிப் பூசலும் அதிகரித்துள்ளது. அரசு பலவிஷயக்களில் தோல்வி அடைந்து வருகிறது.

முதல்வர் மற்றும் அரசின் படுதோல்வியை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று நட்டா சாடியுள்ளார்.

அன்று சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் பிரதமரின் கனவுத்திட்டமான புல்லட் ரயில் திட்டத்தை அனாவசியம் என்றும் அதை எதிர்க்கும் விவசாயிகளுக்கே தன் முழு ஆதரவும் என்றும் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT