அமேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து கேஜ்ரி வாலுக்கு விலக்களித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 மே மாதம் அமேதி மக்களவைத் தொகுதியில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது அமேதி போலீஸார், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 125-ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு, அமேதி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், கேஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரன்ட் பிறப்பித்த விசாரணை நீதிமன்றம், அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் மறுத்துவிட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ஏ.எம்.சப்ரே ஆகியோரடங்கிய அமர்வு, அமேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து கேஜ்ரி வாலுக்கு விலக்களித்து உத்தர விட்டது. மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.