இந்தியா

ஆகஸ்ட் 5-ல் பிரதமர் மோடி பங்கேற்கும் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு

செய்திப்பிரிவு

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி பூமி பூஜை விழா நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடிகலந்து கொள்ளும் பூமி பூஜைவிழாவை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யஉள்ளது.

இதுகுறித்து கோயில் கட்டும்பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை ட்விட்டரில்வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அந்த நாள் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யும். மற்ற தொலைக்காட்சி சேனல்களும் இதை ஒளிபரப்பும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT