இந்தியா

மணிப்பூர் மாநில ஆளுநர் சையது அகமது காலமானார்

பிடிஐ

மணிப்பூர் மாநில ஆளுநர் சையது அகமது உடல்நலக்குறைவு காரண மாக மும்பை மருத்துவமனையில் நேற்று காலையில் காலமானார். அவருக்கு வயது 73.

புற்றுநோயால் பாதிக்கப்பட் டிருந்த ஆளுநர் சையது அகமது, மும்பை பாந்த்ரா புறநகர் பகுதி யில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் கடந்த வாரம் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு மருத் துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பல னின்றி நேற்று காலை அவர் கால மானார். இத்தகவலை அவரது குடும் பத்தினர் உறுதி செய்தனர். மறைந்த ஆளுநருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சையது அகமது. ஐந்து முறை எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் அமைச்சராகவும் இருந்தார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் முது கலை பட்டம் பெற்றவர் சையது அகமது. அத்துடன் உருது மொழி யில் முனைவர் பட்டமும் (பிஎச்.டி.) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் சுயசரிதமும் எழுதி உள்ளார்.

SCROLL FOR NEXT