கோப்புப்படம் 
இந்தியா

ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்ட ‘டாக் மெசஞ்சர்ஸ்’ முறையை கைவிட்டது ரயில்வே: சிக்கன நடவடிக்கை தீவிரம்

பிடிஐ

ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த “டாக் மெசஞ்சர்ஸ்” தூதுவர்கள் முறையை கடந்த வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக ரத்து செய்யபப்படுவதாகவும், அனைத்து தகவல்களும் காணொலி மூலம் பரிமாறிக்கொள்ளலாம் என்று ரயில்வே அதிடியாக உத்தரவிட்டுள்ளது.

"டாக் மெசஞ்சர்ஸ்" என்பது, ஆங்கிலேயர் காலத்தில் இமெயில்-இன்டர்நெட் ஏதும் நேரத்தில் ரயில்வே துறையில் முக்கியமான, ரகசியமான ஆவணங்களை கொண்டுசென்று நேரடியாக பல்வேறு துறைகளுக்கு வழங்குவதற்காக நம்பிக்கைக் குரிய ஆட்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள்தான் டாக் மெசஞ்சர்ஸ் என அழைக்கப்பட்டனர்.

இந்த நடைமுறை ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச் சென்றபின்பும், தொடர்ந்து வந்தது. ரயி்ல்வேயில் முக்கிய கோப்புகள், ரகசிய கோப்புகளை நேரடியாக பல்வேறு மண்டலங்கள அலுவலங்களுக்கும், துறைகளுக்கும் வழங்கும் முறை இருந்து வந்தது. இந்த முறையை ரயில்வே கடந்த வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

இந்த டாக் மெசஞ்சர்ஸ் முறையை “1917” எனும் சமீபத்திய ஹாலிவுட் திரைப்படம் கதையம்சமாகக் கொண்டது.

ரயில்வே துறையில் சிக்கன நடைமுறையைக் கடைபிடிக்கும் வகையில் டாக் மெசஞ்சர்ஸ் சேவை முறையை உடனடியாக ரயில்வே நிறுத்தியுள்ளது. இனிமேல் எந்த விதமான ரகசிய தகவல்களையும், முக்கியக் கோப்புகளையும் இ-மெயில் மூலமாகவும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியம் கடந்த 24-ம் தேதி மண்டலங்களுக்கு பிறப்பித்த உத்தரவில் “ ரயில்வே துறையில் தேவையில்லாத செலவுகளைக் குறைக்கவும், சேமிப்பை அதிகப்படுத்தும் வகையில் சில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வே மண்டல அதிகாரிகளுடன் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் உடனடியாக டாக் மெசஞ்சர்ஸ் அல்லது தனிப்பட்ட தூதர் சேவை நிறுத்தப்படுகிறது. இனிமேல் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே வாரிய அதிகாரிகள், மண்டல மேலாளர்கள் அனைவரும் காணொலி மூலம் முக்கிய ஆலோசனைகள் நடத்திக்கொள்ளலாம். இதன் மூலம் டாக் மெசஞ்சர்ஸ் வழங்கப்படும் படிகள், கட்டணம் போன்றவை மிச்சமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரயில்வே துறை வெளியிட்ட ஓர் அறிவிப்பில், ரயில்வேயில் புதிதாக எந்த புதிய பதவியும் உருவாக்கவும், பணிமனைகளில் ஊழியர்களை வேலைவாங்குவதை முறைப்படுத்தவும் உத்தரவிட்டது.

மேலும் வெளிப்பணி ஒப்படைப்பதையும் குறைத்து, நிகழ்ச்சிகள் நடத்துவதை டிஜிட்டல் தளத்துக்கு மாற்றியது. அதுமட்டுமல்லாமல் மண்டல மேலாளர்கள் ஊழியர்களை புதிதாக பணிகளுக்கு எடுப்பதைக் குறைத்துக்கொள்ளவும், இருக்கும் பணியாளர்களை வைத்து சிறப்பாக வேலைவாங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

நிர்வாக ரீதியில் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் சிக்கனத்தில் ஈடுபட வேண்டும். கோப்புகள், ஆவணங்களை முடிந்தவரை மின்அஞ்சலில் பாதுகாப்பான முறையில் சேமித்து, அனுப்பி வைக்க வேண்டும். ஸ்டேஷனரி பொருட்கள் பயன்பாட்டை 50 சதவீதம் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT