கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் 13 லட்சத்தைக் கடந்தது நோய்தொற்று; கரோனாவில் குணமடைந்தோர் 8.50 லட்சமாக உயர்வு: உயிரிழப்பு 31 ஆயிரமாக அதிகரிப்பு 

பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 48 ஆயிரத்து 916 பேர் புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 757 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் 12 லட்சத்தை எட்டிய நிலையில் இன்று 13 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஆறுதல் அளிக்கும் அம்சமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 8 லட்சத்து 49 ஆயிரத்து 431 பேர் குணமடைந்துள்ளனர். மீள்வோர் சதவீதம் 63.51 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 71 ஆக அதிகரி்த்துள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக நாள்தோறும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 757 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 278 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் 108 பேர், தமிழகத்தில் 88, உத்தரப்பிரதேசத்தில் 59, ஆந்திராவில் 49, மேற்கு வங்கத்தில் 35 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் 32 பேர், குஜராத்தில் 26 பேர், ஜம்மு காஷ்மீரில் 14 பேர், மத்தியப்பிரதேசத்தில் 11 பேர், ராஜஸ்தான், தெலங்கானாவில் தலா 8 பேர் பலியானார்கள்.

அசாம், சத்தீஸ்கர், ஒடிசாவில் தலா 6 பேரும், பஞ்சாபில் 5 பேரும், கேரளா, ஹரியானாவில் தலா 4 பேரும் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட், பிஹாரில் தலா 3 பேரும், புதுச்சேரி, திரிபுரா,மேகாலயா, நாகாலாந்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 13,132 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,777 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,320 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,278 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,290 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 791 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,348 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 602 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 455 ஆகவும், ஹரியாணாவில் 382 ஆகவும், ஆந்திராவில் 933 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,616 பேரும், பஞ்சாப்பில் 282 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 296 பேரும், பிஹாரில் 220 பேரும், ஒடிசாவில் 120 பேரும், கேரளாவில் 54 பேரும், உத்தரகாண்டில் 60 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 70 பேரும், அசாமில் 76 பேரும், திரிபுராவில் 11 பேரும், மேகாலயாவில் 5 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், தாதர் நகர் ஹவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர்.கோவாவில் 29 பேர், புதுச்சேரியில் 35 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,99,967 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,297 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,28,389 பேராக அதிகரித்துள்ளது. 1,10,931 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 53,645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,849 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 34,178 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 26,210 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 60.771 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 53,971 பேரும், ஆந்திராவில் 80,858 பேரும், பஞ்சாப்பில் 12,216 பேரும், தெலங்கானாவில் 52,466 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 16,782 பேர், கர்நாடகாவில் 85,870 பேர், ஹரியாணாவில் 28,975 பேர், பிஹாரில் 33,926 பேர், கேரளாவில் 16,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,562 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 22,693 பேர், சண்டிகரில் 823 பேர், ஜார்க்கண்டில் 7,493 பேர், திரிபுராவில் 3,759 பேர், அசாமில் 29,921 பேர், உத்தரகாண்டில் 5,445பேர், சத்தீஸ்கரில் 6,731 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,954 பேர், லடாக்கில் 1,246 பேர், நாகாலாந்தில் 1,239 பேர், மேகாலயாவில் 588 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹவேலியில் 815 பேர், புதுச்சேரியில் 2,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,483 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 361 பேர், சிக்கிமில் 477பேர், மணிப்பூரில் 2,146 பேர், கோவாவில் 4,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 1,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT