பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

பேக்கிங் செய்யப்படாத இனிப்பு பண்டங்களின் தயாரிப்புத் தேதி, காலக்கெடு குறிப்பிடுதல் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு: உணவுப்பாதுகாப்பு அமைப்பு உத்தரவு

பிடிஐ

சில்லறையில் விற்பனை செய்யப்படும், பேக்கிங் செய்யப்படாத இனிப்புப் பண்டங்களை விற்கும்போது அவை தயார் செய்யப்பட்ட தேதி, எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் எனும் விவரத்தை அக்டோபர் 1-ம் தேதிவரை குறிப்பிட வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்(எப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே இதுபோன்ற உத்தரவை பிப்ரவரி மாதம் பிறப்பித்த இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், பின்னர் அதை ஆகஸ்ட் 31ம்தேதி வரை நீட்டித்தது. தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்தைத் தொடர்ந்து அந்த உத்தரவை அக்டோபர் 1-ம் தேதிவரை சில்லரை விற்பனையாளர்கள் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்(எப்எஸ்எஸ்ஏஐ) நேற்று வெளியிட்ட உத்தரவில் “ கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு, மற்றும் நோய்தொற்று காரணமாக இனிப்பு பண்ட உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், பேக்கிங் செய்யப்படாத, சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனைநாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் குறிப்பிடுவதை மேலும் இரு மாதங்களு்கு நீட்டித்து உத்தரவிடுகிறோம்.

ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட உத்தரவு ஆகஸ்ட் 1ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதை மேலும் இரு மாதங்களுக்கு அக்டோபர் 1-ம் தேதிவரை நீட்டிக்கிறோம்.

இதன்படி வாடிக்கையாளர்களுக்கு தெரியும்வகையில் சில்லறையில் விற்கப்படும்போது, இனிப்புகள் தயாரிக்கப்பட்டதேதி, பயன்படுத்தும் காலக்கெடுவை விற்பனையாளர்கள் குறிப்பிடுதல் அவசியம்.
மேலும், இந்த காலகட்டத்தில் இனிப்பு கடைகளின் உரிமையாளர்கள் உத்தரவை செயல்படுத்தும்வகையில் தங்களின் திறனை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT