இந்தியா

கரோனா நோயாளிகளுக்கு அடுத்த மாதம் மருந்து விநியோகம்: சிப்லா பார்மா நிறுவனம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் ஃபேவிபிராவிர் வகை மருந்தை தயாரித்துள்ளது. இது பரவலாக நல்ல முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. இந்த மருந்துக்கு சிப்லென்சா என்று பெயரிட்டுள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மாத்திரை வகையிலான இந்த மருந்து ஒன்று ரூ.68 வீதம் விற்கப்படும் என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரைகளை ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவமனைகள் மூலமாக கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த ஃபேவிபிராவிர் மருந்து ஜப்பானின் ஃபுஜி பார்மா நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட மற்றும் நடுத்தர பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல முடிவுகளைக் கொடுத்துள்ளது. இதன் சோதனை கட்டத்தில் சிறப்பான முடிவுகள் வந்ததையடுத்து பார்மா நிறுவனங்கள் இந்த மருந்தை உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளன.

முதல் கட்டமாக கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் எளிதில் இந்த மருந்து கிடைக்கும் வகையில் சப்ளை செய்யப்பட உள்ளது.

SCROLL FOR NEXT