இந்தியா

ராமர் கோயில்: ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திலிருந்து பூமி பூஜைக்காக மண், நீர், கூரியரில் அனுப்பி வைப்பு

செய்திப்பிரிவு

ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடைபெறுகிறது. அதற்காக நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திலிருந்து மண் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத்தின் கோவிந்த் ஷெண்ட பிடிஐ-யிடம் கூறும்போது, “ராம்டெக்கில் உள்ள கோயிலிலிருந்து மன் மற்றும் ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடத்திலிருந்து தண்ணீர் ஆகியவை ராமர் கோயில் பூமி பூஜைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதலில் சமயஸ்தலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து மண் மற்றும் நீரை எடுத்து வந்து அனுப்ப முடிவு எடுத்தோம், ஆனால் கரோனா பரவலால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது ஆகஸ்ட் 5ம் தேதி பூமி பூஜை என்று முடிவெடுக்கப்பட்டதால், நாங்கள் சென்ற இடங்களிலிருந்து மண் மற்றும் நீரை சேகரித்து அயோத்திக்கு அனுப்ப முடிவு செய்தோம்.

இந்த நடைமுறைக்காக நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திலிருந்து மண்ணைச் சேகாரித்தும், ராம்டெக்கில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலிலிருந்தும் மண்ணைச் சேகரித்தோம் பிறகு பஞ்சநதி சங்கமிக்கும் இடத்திலிருந்து நீரைச் சேகரித்தோம்

இதன் நோக்கம் என்னவெனில் பூமி பூஜையில் நாங்களும் பங்கேற்றதான ஒரு உணர்வு ஏற்படவே” என்றார்.

மண் மற்றும் பஞ்சநதி நீர் கூரியரில் அனுப்பப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமகா 200 பேர்தான் பூமி பூஜையில் பங்கேற்கவுள்ளனர் என்று அறக்கட்டளை உறுப்பினர் ஸ்வாமி கோவிந்த் தேவ்கிரி மஹராஜ் தெரிவித்தார். அனைத்து சமூக இடைவெளி விதிகளும் கடைப்பிடிக்கப்படவுள்ளன.

SCROLL FOR NEXT