இந்தியா

எல்லையிலிருந்து படை நீக்கம் செய்வதில் சீனா உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்: இந்தியா எதிர்பார்ப்பு

விஜய்தா சிங்

கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் சீனா தன் நடவடிக்கைகளை நிறுத்துவதையும் படை நீக்கம் செய்வதையும் உண்மையாகச் செய்ய வெண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

பாங்காங் சோ ஏரிப்பகுதியில் சில இடங்களில் சீனா தன் படைகளை வாபஸ் பெறவில்லை. இதனையடுத்து ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “எல்லைப்பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட சீனா முழு மூச்சுடன் படைநீக்க நடவடிக்கைகளை உண்மையாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. சிறப்புப் பிரதிநிதிகளிடம் ஒப்புக் கொண்டதற்கிணங்க சீனா நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லையில் பெரிய அளவில் படைகளைக் குவிப்பதும் நியாயமற்ற சாத்தியமற்ற ஆக்ரமிப்புக் கோரல்களை முன்வைப்பதன் மூலம் தங்கள் நடத்தையை மாற்றியிருப்பதும் பரஸ்பர உடன்படிக்கைகளை முற்றிலும் நிராகரிக்கும் செயலாகும். கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ஏற்கெனவே உள்ள நிலைமைகளை ஒருபடித்தான முறையில் மாற்றுவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என்றார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்திய-சீன பிரதிநிதிகளிடையே 3ம் கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. ஒரு மாதத்தில் 3ம் முறையாக நடக்கும் பேச்சுவார்த்தை ஆகும் இது.

ஜூன்30ம் தேதி நடைபெற்ற கார்ப்ஸ் கமாண்டர் மட்ட இருதரப்பு பேச்சுகளுக்கு பிறகு பிஎல்ஏ ராணுவம் கல்வான், கோக்ரா இடங்களிலிருந்து பின் வாங்கியுள்ளதாகவும் ஹாட்ஸ்பிரிங்ஸ், பாங்காங் சோ பகுதியிலிருந்து பகுதியளவு படைநீக்கமும் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஃபிங்கர் 5 மலைப்பகுதியில் சீன ராணுவம் ஒப்பந்தத்தை மீறி இன்னு முழு படை விலக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT