இந்தியா

ஏழை மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்: லாலு பிரசாத் யாதவ் உறுதி

பிடிஐ

என்னை தூக்கிலிட முடிவு செய் தாலும் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடு வேன் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்ட ரில், “இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு மோடி பாரத ரத்னா விருது அளிப்பார்.

பிற்படுத்தப்பட்டோர், தலித், ஏழைகளுக்காக போராடுவதால் அவர்கள் என்னை தூக்கிலிட முடிவு செய்தாலும் நான் அமைதி யாக இருக்க மாட்டேன், தொடர்ந்து போராடுவேன்” என பதிவிட்டுள்ளார்.

“எனக்கு எதிராக மோடி ஐ.நா. சபையில் மனு தாக்கல் செய்தா லும் கூட, இடஒதுக்கீடை அதி கரிக்க வேண்டும், சாதிவாரி கணக் கெடுப்பு விவரத்தை வெளியிடுதல் உள்ளிட்டவற்றுக்காக போராடி வரும் நான் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க மாட்டேன்” எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தனது மகன் தேஜஸ்வி யாதவுக்காக பிரச் சாரத்தில் ஈடுபட்ட லாலு, “இந்த தேர்தல் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முன்னேறிய வகுப்பின ருக்கு இடையேயான நேரடிப் போட்டி” என தெரிவித்திருந்தார்.

இதனால் தேர்தல் விதி முறைகளை மீறியதாகக் கூறி தேர்தல் ஆணையம் தரப்பில் லாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT