இந்தியா

காஷ்மீரில் புதிய பன்முக ஹை-டெக் வீடுகள்

ஏஎன்ஐ

காய்கனிகளைப் பயிரிடுவதற்காக ஸ்ரீநகரில் பன்முக ஹை-டெக் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு கட்டியுள்ளது.

கிச்சன் கார்டன் திட்டம் என்று அழைக்கப்படும் இது பற்றி இதன் உதவியாளர் ஜஹூர் அகமது கூறும்போது, “மத்திய அரசு ஸ்பான்சர் செய்யும் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனாவின் கீழ் இத்தகைய பாலி-இல்லங்கள் ரூ.10 லட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப்போதைய தேவைப்பாடு காரணமாக ஈரப்பத கட்டுப்பாடு, ஃபாகர் சிஸ்டம் என்று அழைக்கப்படும் காற்றில் நீர்த்துளிகளை தெளித்து வெப்ப அளவை தணிக்கும் ஹைடெக் தொழில்நுட்பம், கடும் குளிர்காலங்களில் வெப்பமூட்டும் அமைப்பு ஆகியவற்றுடன் இந்த இல்லம் திகழ்கிறது” என்றார்.

இதற்கு முன்பாக பாலி-ஹவுஸ்கள் 12 முதல் 14 சதுர அடிதான் இருக்கும். ஆனால் இந்த ஹைடெக் பாலி-ஹவுஸ்கள் 2000 சதுர அடி கொண்டது.

இதன் மூலம் காய்கறிகள் அதிக விளைச்சல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இயற்கையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை, இந்த சிஸ்டம் மூலம் சீசன் இல்லாத காலத்திலும் காய்கனிகளை விளைவிக்க முடியும். இரவிலும் புதிய காய்கனிகளை வளர்க்க முடியும்.

ஜம்மு காஷ்மீரில் காய்கனி பயிரிடுதல் முக்கியமானதொரு வாழ்வாதார தொழிலாகும்.

SCROLL FOR NEXT