இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 37 ஆயிரத்து 724 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 648 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.50 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 49 ஆக உயர்ந்து, மீள்வோர் சதவீதம் 63.13 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 648 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் நேற்று 246 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 75 பேர், ஆந்திராவில் 62 பேர், கர்நாடகாவில் 61 பேர், உத்தரப் பிரதேசத்தில் 37 பேர், மேற்கு வங்கத்தில் 35 பேர், குஜராத்தில் 34 பேர், டெல்லியில் 27 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் 18 பேர், ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானில் தலா 9 பேர், தெலங்கானாவில் 7 பேர், ஒடிசாவில் 6 பேர், சத்தீஸ்கரில் 4 பேர், கோவாவில் 3 பேர், ஜார்க்கண்டில் 2 பேர், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், திரிபுராவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 12,276 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,690 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,626 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,196 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,182 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 756 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,229 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 577 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 429 ஆகவும், ஹரியாணாவில் 364 ஆகவும், ஆந்திராவில் 758 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,464 பேரும், பஞ்சாப்பில் 263 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 263 பேரும், பிஹாரில் 217 பேரும், ஒடிசாவில் 103 பேரும், கேரளாவில் 44 பேரும், உத்தரகாண்டில் 55 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 55 பேரும், அசாமில் 58 பேரும், திரிபுராவில் 8 பேரும், மேகாலயாவில் 4 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், தாதர் நகர் ஹவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 30 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,82,217 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,670 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,25,096 பேராக அதிகரித்துள்ளது. 1,06,118 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 50,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,423 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 31,373 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 24,095 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 53,288 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 47,030 பேரும், ஆந்திராவில் 58,668 பேரும், பஞ்சாப்பில் 10,899 பேரும், தெலங்கானாவில் 47,705 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 15,258 பேர், கர்நாடகாவில் 71,069 பேர், ஹரியாணாவில் 27,462 பேர், பிஹாரில் 28,952 பேர், கேரளாவில் 13,994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,890 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 18,757 பேர், சண்டிகரில் 751 பேர், ஜார்க்கண்டில் 6,159 பேர், திரிபுராவில் 3,331 பேர், அசாமில் 25,382 பேர், உத்தரகாண்டில் 4,849 பேர், சத்தீஸ்கரில் 5,729 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,664 பேர், லடாக்கில் 1,198 பேர், நாகாலாந்தில் 1,030 பேர், மேகாலயாவில் 490 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹவேலியில் 705 பேர், புதுச்சேரியில் 2,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,318 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 317 பேர், சிக்கிமில் 330 பேர், மணிப்பூரில் 2,015 பேர், கோவாவில் 4,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது