மாதம் ரூ.14 ஆயிரம் வருமானம் வருவதாக தெரிவித்த 80 வயது மூதாட்டிக்கு ஸ்விஸ் வங்கிக் கணக்கில் ரூ.196 கோடி இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மும்பை வருமானவரித்துறை மேல் முறையீட்டு ஆணையம் (ஐடிஏடி) அபராதத்துடன் வரி செலுத்துமாறு அந்த மூதாட்டிக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் வசிக்கும் ரேணு தரணிக்கு (80) ஜெனீவாவில் உள்ளஹெச்எஸ்பிசி வங்கியில் கணக்குஉள்ளது. இதில் ரூ.196 கோடி உள்ளது. இவரது குடும்ப அறக்கட்டளை மூலம் இவருக்கு இத்தொகை கிடைத்துள்ளது. 2004-ல்தொடங்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கில் கேமேன் ஐலண்ட் தீவுகளைச் சேர்ந்த ஜிடபிள்யூ இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மூலம்பணம் மாற்றப்பட்டுள்ளது.
2005-06-ம் ஆண்டில் இவர் தாக்கல் செய்த வருமான வரி படிவத்தில் ஸ்விஸ் வங்கிக் கணக்கு விவரத்தை அவர்குறிப்பிடவில்லை. இது தொடர்பான விவரம் கேட்பு வழக்கு 2014-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்தேதி தொடங்கப்பட்டது. தரணி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ஹெச்எஸ்பிசி ஜெனீவா கிளையில் கணக்கு எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார். இவர் தன்னை இந்தியர் அல்லாதவர் என குறிப்பிட்டிருந்்தார்.
ஆனால், 2005-06-ம் ஆண்டு தரணி தாக்கல் செய்திருந்த வருமான வரி படிவத்தில் இவரது ஆண்டு வருமானம் ரூ.1.7 லட்சம் என தெரிவித்திருந்தார். இவர் தான் பெங்களூருவில் வசிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வரி செலுத்தும் இந்தியர் என குறிப்பிட்டிருந்தார்.
பிரமாண பத்திரத்தில் இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் என்றும், வரி படிவத்தில் இந்தியர் என்றும் தரணி குறிப்பிட்டிருந்ததைஐடிஏடி சுட்டிக்காட்டியது. அத்துடன் மிகக் குறுகிய காலத்தில்அவரது கணக்கில் இவ்வளவுதொகை எப்படி சேர்ந்தது என்றவிவரமும் தெரிவிக்கப்படவில்லை என ஐடிஏடி தெரிவித்துள்ளது.