இந்தியா

கரோனா வைரஸையும் ஆட்சிக் கவிழ்ப்பையும் இணைத்து பாஜகவை சூசகமாக விமர்சித்த கபில் சிபல்

ஏஎன்ஐ

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியையும் கரோனா வைரஸ் பெருந்தொற்றையும் இணைத்து பாஜக மீது சூசகமக விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “வாக்சின் தேவை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சூது செய்து கவிழ்க்கும் வைரஸ் டெல்லியில் உள்ள வூஹான் போன்ற இடத்திலிருந்து பரவுகிறது. இதற்கான ஆன்ட்டி-பாடி 10வது ஷெட்யூலை திருத்துவதுதில் உள்ளது. கட்சி மாறுபவர்களை 5 ஆண்டுகளுக்கு எந்த பதவியும் வகிக்க முடியாதவாறு தடை செய்ய வேண்டும். அடுத்த தேர்தலில் நிற்பதையும் தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக ராஜஸ்தான் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதற்கான ஆடியோ டேப் ஆதாரங்கள் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் கபில் சிபல் இந்த ட்வீட் பதிவை வெளியிட்டுள்ளார்.

சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்யும் சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

SCROLL FOR NEXT