இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் கரோனா வைரஸால் புதிதாக 38 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 543 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 ஆக அதிகரித்து, 11 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதேசமயம் ஆறுதல் அளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்து 422 பேராக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் எப்போதும் இல்லாத வகையில் 23 ஆயிரத்து 672 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 3 லட்சத்து73 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து 4-வது நாளாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 543 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனாவில் 26 ஆயிரத்து 816 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 93 பேர், தமிழகத்தில் 88 பேர், ஆந்திராவில் 52 பேர், மேற்கு வங்கத்தி்ல 27பேர், டெல்லியில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 24பேர், ஹரியானாவில் 17 பேர், குஜராத்தில் 16 பேர், மத்தியப்பிரதேசத்தில் 9 பேர், பிஹார், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா 7 பேர், தெலங்கானாவில் 6 பே்ர, ஜம்மு காஷ்மீரில் 5 பேர், ஒடிசா, புதுச்சேரியில் தலா 3 ப ேர், அசாம், திரிபுரா, கேரளாவில் தலா 2 பேர், சண்டிகர், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 11,596 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,597 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,403ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,122 ஆகவும், அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,076 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 706 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,108 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 553 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 409 ஆகவும், ஹரியாணாவில் 344 ஆகவும், ஆந்திராவில் 586 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,240 பேரும், பஞ்சாப்பில் 246 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 236 பேரும், பிஹாரில் 208 பேரும், ஒடிசாவில் 86 பேரும், கேரளாவில் 40 பேரும், உத்தரகாண்டில் 52 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 46 பேரும், அசாமில் 53 பேரும், திரிபுராவில் 5 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயா, தாத்ரா நாகர்ஹாவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 28 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 937 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,65,663 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,856 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,21,582 பேராக அதிகரித்துள்ளது. 1,01,274 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 47,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,035 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 28,500 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 21,763 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 47,036 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 40,209 பேரும், ஆந்திராவில் 44,609 பேரும், பஞ்சாப்பில் 9,792பேரும், தெலங்கானாவில் 43,780 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 13,198பேர், கர்நாடகாவில் 59,692 பேர், ஹரியாணாவில் 25,547 பேர், பிஹாரில் 25,136 பேர், கேரளாவில் 11,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,199 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 16,701 பேர், சண்டிகரில் 700 பேர், ஜார்க்கண்டில் 5,342 பேர், திரிபுராவில் 2,654 பேர், அசாமில் 22,918 பேர், உத்தரகாண்டில் 4,296 பேர், சத்தீஸ்கரில் 5,233 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,497 பேர், லடாக்கில் 1,159 பேர், நாகாலாந்தில் 978 பேர், மேகாலயாவில் 418 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 602 பேர், புதுச்சேரியில் 1,894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,066 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 284 பேர், சிக்கிமில் 275 பேர், மணிப்பூரில் 1891 பேர், கோவாவில் 3,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது