ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமை யிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலை யில், ஜெய்ப்பூரில் உள்ள ‘பேர் மான்ட்’ என்ற நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ.க் கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஓட்டலில் அவர்களுக்குப் பொழுது போகாததால், புல்வெளியில் யோகா பயிற்சியில் ஈடுபடுகின்ற னர். அத்துடன், வார இறுதி நாட்களில் சமையல் கலைஞரை சூழ்ந்து நின்று விதவிதமான உணவுகளை சமைக்க கற்று வருகின்றனர்.
எம்எல்ஏ.க்கள் சாதாரண டி ஷர்ட், பேன்ட் அணிந்து காணப்படுகின்றனர். கரோனா வைரஸ் பரவல் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாக தெரிய வில்லை. யாரும் முகக் கவசமும் அணியவில்லை. எம்எல்ஏ.க்கள் அருகருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூறும்போது, ‘‘தற்போது நாங்கள் பீட்ஸா, பாஸ்தா, பட்டர் பனீர் செய்வது எப்படி என்று தெரிந்து கொண் டோம்’’ என்று சிரித்துக் கொண்டே கூறுகின்றனர்.
ராஜஸ்தானில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முதல் வர் அசோக் கெலாட் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் பதற் றம் ஏதும் காங்கிரஸ் எம்எல்ஏ.க் கள் முகத்தில் இல்லை. சாதார ணமாகப் பொழுதைக் கழித்து வருகின்றனர்.