அசாம் மாநில கனமழை வெள்ளத்திற்கு வியாழன் காலை மேலும் 2 பேர் பலியாக, மொத்தமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
30 மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்து 7 ஆயிரத்து 111 ஆக உள்ளது.
சுமார் 487 முகாம்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தேமாஜி, லக்மிபூர், பிஸ்வந்த், சோனித்பூர், சிராங், உதல்குரி, கோலாகாட், ஜோர்ஹத், மஜுலி, சிவசாகர், திப்ருகார், தின்சுகியா ஆகியவை அடங்கும்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசாம் காஸிரங்கா தேசியப் பூங்காவில் வெள்ள நீரில் மூழ்கி 66 விலங்குகள் இறந்துள்ளன, 170 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு பெரியது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது, ஏகப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் வெள்ள நீரில் சேதமடைந்துள்ளன.