திருப்பதியில் கரோனா தொற்றுபரவாமல் தடுக்க சுமார் 82 நாட்கள் வரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்துசெய்யப்பட்டது. மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் ஏழுமலையானை பக்தர்கள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக திருப்பதியில் கரோனாதொற்று அதிகரித்து வருகிறது. மொத்தம் உள்ள 50 மாநகராட்சிவார்டுகளில் 43 வார்டுகளில் தொற்று உள்ளது. திருப்பதியில்மட்டும் 800-க்கும் மேற்பட்டோர்கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 500-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கும் கரோனாதொற்று ஏற்பட்டதால், இம்மாதம்30-ம் தேதி வரை பக்தர்களுக்கு கூடுதல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படாது என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். ஆனால் தற்போது தினமும் 12,500 பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். 80-க்கும் மேற்பட்ட தேவஸ்தான ஊழியர்களுக்கு கரோனா தொற்றுஉள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திருமலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிஎன சித்தூர் மாவட்ட மருத்துவ துறை நேற்று மதியம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால்,ஒரு மணி நேரத்தில் அறிக்கையில் இருந்த திருமலை பெயரைநீக்கி மீண்டும் அதே அறிக்கையை மருத்துவ துறை வெளியிட்டுள்ளது. இதனால், தேவஸ்தான ஊழியர்கள் உட்பட பொதுமக்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.