இந்தியா

கரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் கரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பலர் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

ஆந்திர தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 4 துறைகளின் அலுவலகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் சட்டமன்ற சபாநாயர் தம்மிநேனி சீதாராம், அமைச்சர் தர்மான கிருஷ்ணா தாஸ் ஆகிய இருவரும் தங்கள்அலுவலகங்களை பூட்டி விடுமாறு நேற்று உத்தரவிட்டனர். இதையடுத்து இருவரின் அலுவலகங்களும் பூட்டப்பட்டன. கரோனா பரவி வருவதால், தங்களின் அலுவலகத்திற்கோ அல்லது வீட்டுக்கோ இன்னமும் 15 நாட்களுக்கு யாரும் வரவேண்டாம் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT