ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட சமூக ஊடக செயலிகள் பட்டியலில் மேலும் சிலவற்றை சேர்த்து ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது. இவற்றில் பல சீனாவுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நலனுக்கு எதிரான சில சக்திகள் தோழமை முறையில் என ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவை மூலமும் டேட்டிங் செயலிகள் மூலமும் விடுக்கும் தகவல்களால் ஏமாறக்கூடாது என ராணுவ வீரர்களுக்கு ஏற்கெனவே எச்சரித்துள்ளது ராணுவம்.
லடாக் எல்லையில் சீன படைகளுடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து சீன நாட்டின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில் ஜூம், விமேட் உள்ளிட்ட காணொலி நேரலை செயலிகள் மற்றும் பப்ஜி போன்ற ஆடுகள செயலிகள், மின்னணு வர்த்தகம், செய்தி, இசை உள்ளிட்ட செயலிகளை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது ராணுவம்.
ஏற்கெனவே, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஜென்டர், ஷேர்இட் உள்ளிட்ட செயலிகளுக்கு ராணுவம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.