இந்தியா

நாய் இறைச்சிக்கு தடை விதித்ததால் நாகாலாந்தில் சர்ச்சை

செய்திப்பிரிவு

நாகாலாந்தில் நாய்களை இறக்குமதி செய்து வர்த்தகம் செய்வதற்கும், நாய் இறைச்சி விற்பனைக்கும் அம்மாநில அரசு கடந்த 3-ம்தேதி தடை விதித்தது.

இந்த நடவடிக்கையை செல்லப்பிராணிகள் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால்நாய் இறைச்சியை பாரம்பரிய உணவாகக் கொண்டுள்ள பெரும்பாலான நாகா பழங்குடியினத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்தவிவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை, ஒருவரின் பாரம்பரிய வழக்கத்தையும் உணவு உண்ணும் உரிமையையும் மீறும் செயல் என நாகா கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் நாய்இறைச்சிக்கு தடை விதித்திருப்பது முட்டாள்தனமானது என்றுசிலர் கூறியுள்ளனர். மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டபோது அது தோல்வி அடைந்ததைப் போல இதுவும் தோல்வி அடையும் என சிலர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT