காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

பொருளாதார நிர்வாகமின்மையால் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழிய போகிறது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிடிஐ


மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டின் பொருளதாாரத்தை சரியாக நிர்வாகம் செய்யாததால், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போகின்றன, இனி, இது அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். லாக்டவுனை சரியான முறையில் பயன்படுத்தவி்ல்லை என்றும், லாக்டவுனால் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு நேரடியாக ரூ.7500 வழங்க வேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி தொடரந்து வலியுறுத்தி வருகிறார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட படம்

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கரோனா வைரஸ் வளைகோட்டை சாய்ப்பதற்கு பதிலாக, பொருளாதார வளர்ச்சி வளைக்கோட்டை சாய்த்துள்ளது என்று கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்தார்

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.

அந்த ஆய்வு அறிக்கையில், “ இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவில் 10 குடும்பங்களில் 8 குடும்பங்கள் வருவாய் இழப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள், குடும்பத்தினர் வருவாய் இழப்பால் மோசமாக பாதிக்கப்படுவார்கள். நடுத்தரகுடும்பத்தில் கீழ் நிலையில் வசிப்போர் அதிகமான வேலையிழப்பைச் சந்திப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வறுமை அதிகிரிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5சதவீதம் குறையக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில் “ இந்தியாவின் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டது பெரும் சோகம். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப் போகின்றன. இந்த மவுனமான நீண்டகாலத்துக்கு ஏற்க முடியாது “ எனத் தெரிவித்துள்ளார். அதோடு “பிஜேபிடிஸ்ட்ராக்ட்அன்ட்ரூல்” எனும் ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்

SCROLL FOR NEXT