இந்தியா

திருப்பதி சேஷாசலத்தில் 15 லட்சம் மரக் கன்று நட தேவஸ்தானம் திட்டம்

செய்திப்பிரிவு

திருப்பதி பிரம்மோற்சவ ஏற்பாடு கள் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரம்மோற்சவ நாட்களில் வரும் 16 முதல் 24-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவை களும், விஐபி தரிசன முறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது தினமும் 3.60 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பிரம்மோற் சவத்துக்கு வரும் பக்தர்களுக்காக 6 லட்சம் லட்டு பிரசாதங்கள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு 12 லட்சம் செம்மரக்கன்றுகள் நடப்பட்டன. அடுத்த ஆண்டு 750 ஏக்கர் பரப்பில் மேலும் 15 லட்சம் செம்மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று தற்போது 30 ஏக்கரில் மட்டுமே சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை அடுத்த ஆண்டில், 250 ஏக்கரில் சந்தன மரக்கன்றுகள் நடப்படும்.

திருப்பதி தேவஸ்தான தகவல் தொடர்பான ‘மொபைல் ஆப்’ விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

இவ்வாறு சாம்பசிவ ராவ் கூறினார்.

SCROLL FOR NEXT