இந்தியா

பிளாஸ்மா தானம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும்: மருத்துவமனைகளுக்கு கேஜ்ரிவால் கோரிக்கை

செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளை தொடர்புகொண்டு பிளாஸ்மா தானம் செய்யுமாறு கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்ற ஒரு நபர்தனது 5 நண்பர்களுடன் வந்துபிளாஸ்மா தானம் செய்யப்போவதாக தெரிவித்தார்.

குறைந்தது 14 நாளுக்கு முன்பு குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.

டெல்லியில் சுமார் 1 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. இவர்களில் 72ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். கடந்த மாதம் கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி விகிதம் 35 சதவீதமாக இருந்தது. தற்போது இது 11 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த வாரம் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டது. ஆனால், பிளாஸ்மா நன்கொடை பெரிய அளவில் இல்லை. இப்படியே இருந்தால் பிளாஸ்மாபற்றாக்குறை ஏற்படும்.

நோயை கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறது. எனவே, பிளாஸ்மா தானம் செய்யுமாறு மக்களிடம் டாக்டர்கள் குழு கோரிக்கை வைத்து வருகிறது. இதற்கு மக்கள் முன்வர வேண்டும். சிகிச்சைக்காக சேர்க்கும்போதே கரோனா நோயாளிகளிடம், குணமடைந்து வீடு திரும்புவதற்கு முன்பு பிளாஸ்மா செல்தானம் செய்யுமாறு மருத்துவமனைகள் எடுத்துக்கூற வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT