படவிளக்கம்: கான்பூரில் இடிக்கப்பட்ட விகாஸ் துபேயின் வீடு முன்பான கல்வெட்டு 
இந்தியா

கான்பூர் சம்பவத்தில் போலீஸார் பலியாகக் காரணமான ஜேசிபியை வைத்தே தரைமட்டமாக்கப்பட்ட விகாஸ் வீடு: உளவு புகாரில் ஒரு ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ஆர்.ஷபிமுன்னா

உத்திரப்பிரதேசம் கான்பூரில் 8 போலீஸார் பலியாகும் விதத்தில் அவர்களை நடக்கச் செய்த ஜேசிபியை வைத்தே விகாஸின் வீடு இன்று தரைமட்டமாக்கப்பட்டது. இத்துடன், விகாஸுக்கு ஆதரவாக உளவு பார்த்து சொன்னததாக ஒரு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்ய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் உபியின் அதிரடி படையிடம் பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் கிடைக்கத் துவங்கி உள்ளன. இதில் பாலிவுட் திரைப்படங்களில் வரும் காட்சிகளை போல் விகாஸ் துபேவின் கிரிமினல் நடவடிக்கைக்கு சில போலீஸாரும் உதவியது தெரிந்துள்ளது.

விகாஸ் துபேயின் வீடு, பிக்ரு கிராமத்தின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்தது. அப்பகுயின் சுற்றுப்புறங்களில் கிரிமினல் குற்றங்கள் செய்து வருபவர்கள் விகாஸ் வீட்டில் வந்து அடைக்கலம் பெறுவது வழக்கமாக இருந்துள்ளது.

இப்பகுதியில் போலீஸாரின் நடவடிக்கைகளை கண்காணிக்க விகாஸ் துபே பல சிசிடிவி கேமிராக்களை பொருத்தி வைத்திருந்துள்ளார். அதன் பதிவுகள் தற்போது போலீஸாருக்கு கிடைக்காதபடி சிதைக்கப்பட்டுள்ளன.

இதுபோல், விகாஸின் நடவடிக்கைகளை நன்கு அறிந்தும் அவனது கும்பலை பிடிக்க அப்பகுதியின் போலீஸார் முயன்றதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. விகாஸுடனான நட்பின் காரணமாக அவருக்கு எதிரான கான்பூர் போலீஸாரின் நடவடிக்கைகளும் உளவு கூறப்பட்டு வந்துள்ளன.

இதனால், சவுபேபூர் ஆய்வாளரான வினய் திவாரி பணியிடை நீக்கம் செய்து விசாரிக்கப்பட்டு வருகிறார். விகாஸ் துபே இருக்கும் இடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விகாஸின் வீடு கான்பூர் வளர்ச்சி ஆணையத்தின் அனுமதியின்றி கட்டப்பட்டதால் அது இன்று

காலை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வீட்டை இடிக்கப் பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் தான் போலீஸார் பலியாகவும் காரணமாக இருந்தது.

இதை சாலையில் நிறுத்தி தடுக்கப்பட்டதால் தான் அவர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி நடக்க வேண்டியதாயிற்று. தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் போலீஸார் திட்டமிட்டு பலியாக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் 7 போலீஸாரை நேற்று உபி முதல்வரான யோகி ஆதித்யநாத் நேரில் வந்து ஆறுதல் கூறினார்

SCROLL FOR NEXT