இந்தியா

சீன ஊடுருவலுக்கு எதிராக லடாக் மக்கள் குரல் எழுப்புகின்றனர், எச்சரிக்கையைப் புறக்கணிக்கக் கூடாது: ராகுல் காந்தி 

பிடிஐ

தேசப்பற்றுள்ள லடாக் மக்கள் சீனாவின் ஊடுருவலுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ரனர், அரசு அவர்கள் குரல்களை கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

மேலும் தன் ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவியுள்ளதாக ஊடகச் செய்தி அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

“தேசப்பற்றுள்ள லடாக் மக்கள் சீனா ஊடுருவலுக்கு எதிராக குரல்களை எழுப்பி உள்ளனர். அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர்களின் எச்சரிக்கையை புறக்கணித்தால் அது இந்தியாவுக்குத்தான் ஆபத்து.

இந்தியாவுக்காக அவர்கள் குரல்களைக் கேளுங்கள்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் ராகுல் காந்தி

இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டதிலிருந்தே மத்திய அரசின் மீது ப.சிதம்பரம், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT