இந்திய முஜாகிதீன் தீவிரவாதி சுல்தான் அகமது பைசானுக்கும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அபு ஆசிம் ஆஸ்மிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
துபையில் தொழிலதிபராக வலம் வந்த இந்திய முஜாகிதீன் தீவிரவாதி சுல்தான் இன்டர்போல் அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா கொண்டு வரப்பட்டார்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.
மும்பையைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அபு ஆசிம் ஆஸ்மிக்கும் தீவிரவாதி சுல்தான் அகமது பைசானுக்கும் இடையே தொடர்பு இருந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் உத்தரப் பிரதேசம் ஆசம்கார் பகுதியைச் சேர்ந்த வர்கள். 1980-களில் மும்பைக்கு இடம்பெயர்ந்த அவர்கள், ஒரே நிறுவனத்தில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர். அதன் பின்னர் துபைக்கு சென்ற சுல் தான் அங்கு சலவையகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அபு ஆசிம் ஆஸ்மி அளித்துள்ள விளக்கத்தில், 1985-ல் என்னுடைய வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சுல் தான் பணியாற்றினார், அதன்பிறகு மதன்புராவில் அவர் தனியாக நிறுவனத்தைத் தொடங்கினார், பின்னர் துபைக்கு சென்றுவிட்டார். அவரது அண்மைக்கால நடவடிக் கைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகளுக்கு வேலைவாய்ப்பு
மேலும் இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் ஷாநவாஸ், படா சாஜித், சல்மான் ஆகியோருக்கு சுல்தான் பல்வேறு விதங்களில் உதவி செய்துள்ளார். இவர்கள் மூவரும் 2009-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட்டில் துபைக்கு தப்பிச் சென்றுள்ளனர். அங்கு சுல்தானின் சலவையகத்தில் மூவரும் பணியாற்றியுள்ளனர்.
அங்கு சென்ற இந்திய முஜா கிதீன் தலைவர் இக்பால் பட்கல், மூத்த தலைவர் அமீர் ரேஷா கான் ஆகியோர் தீவிர வாதிகள் ஷாநவாஸ், படா சாஜித், சல்மானை சந்தித்து இந்தியாவுக்கு எதிராகப் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர்.
அவை குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வரு கின்றனர். சுல்தானிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.