இந்தியா

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் கரோனா பாதித்தவர்கள் தபால் ஓட்டு போடலாம்- தேர்தல் ஆணையம் அனுமதி

செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கரோனா வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர் தபால் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிஹார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், கரோனா பாதித்தவர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதை தவிர்க்க அவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்கலாம் என்றுபிஹார் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், வயதானவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும்வாய்ப்பு அதிகம் உள்ளதால் 65 வயதுக்கு மேற்பட்டோரும் தபால் ஓட்டளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்குச் சாவடிகளில்கூட்டம் அதிகமாக கூடுவதைத்தடுக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,000 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் தனிமை முகாம்களில் இருப்போர் தபால் மூலம்வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்
உள்ளதால் 65 வயதுக்கு மேற்பட்டோரும் தபால் ஓட்டளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT