59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த பிறகு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாஜக மீது மீண்டும் ஒரு விமர்சனத்தை முன் வைத்தார்.
சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதை மோடி தலைமை பாஜக அரசு நிறுத்தவில்லை. ஆனால் மேக் இன் இந்தியா என்று பேசி வருகிறது என்று அவர் சாடினார்.
இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “தரவுகள் பொய் சொல்லாது, பாஜக கூறுவது: மேக் இன் இந்தியா, பாஜக செய்வது: சீனாவிலிருந்து வாங்குவது” என்று பதிவிட்டு வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.
சீனாவிலிருந்து கொள்முதல் செய்ததில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும் அவர் ஒப்பீடு செய்து வரைபடம் வெளியிட்டுள்ளார்.
அதாவது இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2009-ம் ஆண்டு 12% ஆக இருந்தது 2018-ல் 18% ஆக அதிகரிதுள்ளது என்று ராகுல் காந்தி வரைபடத்தில் காட்டியுள்ளார், ஆனால் அதே வரைபடத்தில் 2018 முதல் 2020 வரை சீனாவிடமிருந்து கொள்முதல் சீராகக் குறைந்து வந்துள்ளதும் காட்டப்பட்டுள்ளது.