இந்தியா

கச்சா எண்ணெய் விலை குறைவு; பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு ஏன்: ராகுல் காந்தி சரமாரி கேள்வி

செய்திப்பிரிவு

கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லா அளவு உயர்ந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை கடந்த 7-ம் தேதியிலிருந்து 22-வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இன்று அறிவித்துள்ளன.

இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 பைசாவும், டீசலுக்கு 13பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது, நேற்று ஒரு நாள் மட்டும் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன் மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.38 பைசாவிலிருந்து, ரூ.80.43 பைசாவாக அதிகரி்த்துள்ளது.டீசல் ஒரு லிட்டர் ரூ.80.40 பைசாவிலிருந்து ரூ.80.53 பைசாவாக உயர்ந்துள்ளது.

மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.87.14 பைசாவிலிருந்து ரூ.87.19 ஆகவும், டீசல் ரூ.78.71 லிருந்து ரூ.78.83 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை இன்றைய நிலவரப்படி லிட்டர் ரூ.83.63 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.77.72 பைசாவுக்கும் விற்பனையாகிறது.

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடுமுழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:

‘‘கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் விலையை உயர்த்துகிறீர்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.’’ எனக் கூறினார்.

Price of crude oil is at an all-time low but fuel prices

SCROLL FOR NEXT