இந்தியா

கரோனா வைரஸ்: டெக்ஸாமெதாசோன் பயனுக்கு அரசு அனுமதி 

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று நோயுள்ளவர்களுக்கு பழைய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெதாசோனை, மெதில் பிரெட்னிசொலோனுக்கு மாற்றாகப் பயன்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

சனிக்கிழமையன்று மத்திய சுகாதார அமைச்சகம் புதிய கோவிட்-19 சிகிச்சை நடைமுறைகளை அறிவித்தது. அதில் டெக்ஸாமெதா சோனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

“சமீபத்திலி அதன் திறன் பற்றிய மதிப்பீட்டின் படியும், நிபுணர்கள் ஆலோனையின் படியும் டெக்சாமெதாசோன் பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கிறோம்” என்று சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கார்ட்டிகோ ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெதாசோன் அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தியைக் குலைக்கும் கூறுகளுக்கு எதிராக பல சுவாசப்பாதை நோய்களுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் தீவிரமாகப் பாதிக்கபப்ட்டு வெண்ட்டிலேட்டர் மற்றும் பிராணவாயு உதவியுடன் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு அதிகப் பயன் தரும், மிதமான கரோனா நோயாளிகளுக்கு இது பயனளிக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெக்ஸாமெதாசோன் நாட்டின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ளதாகும் தற்போது இந்தியா முழுதும் கிடைக்கிறது, விலை மிகவும் குறைவு.

இதனைப் பயன்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

SCROLL FOR NEXT