இந்தியா

காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் 4 வயது குழந்தை, சிஆர்பிஎஃப் வீரர் பலி

பிடிஐ

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 வயது சிறுவன், ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நண்பகல் 12:10 மணியளவில் பத்ஷாகி பாலம் அருகே 90 சிஆர்பிஎஃப் படைப்பிரிவினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரும் 4 வயது சிறுவன் ஒருவரும் பலியாகினர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இவர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தனர், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதி முழுதையும் சுற்றி வளைத்துள்ளனர், தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT